ACTIVITIES AND ADSMEDIA STATEMENTPBT

மக்களின் சுமையைக் குறைப்பதற்கு மலிவு விற்பனைத் திட்டம் தொடரப்பட வேண்டும்

ஷா ஆலம், அக் 30- மக்களுக்கு பெரிதும் நன்மை பயக்கக்கூடிய அத்தியாவசிய பொருள் மலிவு விற்பனைத் திட்டம் எதிர்காலத்தில் தொடரப்பட வேண்டும் என்று கோம்பாக் செத்தியா  தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஏ. ரஹிம் காஸ்டி வலியுறுத்தியுள்ளார்.

ஜாலான் கோம்பாக் 8 ½ மைலில் நேற்று நடைபெற்ற அத்தியாவசிய உணவுப் பொருள் மலிவு விற்பனைத் திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாக அவர் சொன்னார்.

ஜெலாஜா ஏசான் ராக்யாட் திட்டத்தின் 10 வது தொடராக இந்த விற்பனை கோம்பாக் செத்தியா தொகுதியில்  நேற்று நடைபெற்றது. இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

மக்களின் சுமையைக் குறைப்பதற்கு ஏதுவாக இத்திட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்பட வேண்டும் என்பது தமது எதிர்பார்ப்பாகும் என அவர் சொன்னார்.

இந்த மலிவு விற்பனையில் நடுத்தர கோழி 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும்  பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும்  5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

மாநிலத்தின் 56 தொகுதிகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 160 இடங்களில் கடந்த செப்டம்பர் 6 முதல் டிசம்பம்பர் 6 வரை இந்த மலிவு விற்பனை நடைபெறுகிறது. இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு மாநில அரசு 1 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது.


Pengarang :