ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

ஆறு மாநிலங்களில் வெள்ள அபாயம்- வடிகால், நீர்ப்பாசனத் துறை எச்சரிக்கை

கோலாலம்பூர், நவ 12– பினாங்கு, சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பகாங் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்தால் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (ஜே.பி.எஸ்.) எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பெட்டாலிங் மாவட்டத்தில் கம்போங் தெங்கா ஏ, கம்போங் கோல சுங்கை பாரு, கம்போங் பெர்சத்து பத்து 13, கம்போங் மிலாயு சுபாங், டி.டி.டி.ஐ. ஜெயா, கம்போங் அமான் பெஸ்தாரி, கம்போங் ஸ்ரீ அமான் பெர்காட் ஆகியவை வெள்ள அபாயம் உள்ள பகுதிகளாகும் என்று ஜே.பி.எஸ். அறிக்கையில் தெரிவித்தது.

மேலும், கம்போங்  புக்கிட் லான்சோங், கேடிஎம் பத்து தீகா, செக்சன் 13 ஷா ஆலம், கம்போங் கெனங்கான் பூச்சோங், தாமான் மெஸ்ரா, ஷா ஆலம், பெஸ்ராயா, செர்டாங் விவசாயத் துறை வளாகம் ஆகியவையும் வெள்ள அபாயம்  உள்ள இடங்களாகும்.

கிள்ளான் மாவட்டத்தைப் பொறுத்தவரை  கம்போங் டெலெக், ஜாலான் கெபுன் நெனாஸ், தாமான் கம்போங் ஜாவா,  தெலுக் புலாய், தாமான் பெட்டாலிங், தாமான் செந்தோசா, தாமான் சௌஜானா, தாமான் ரஸ்னா, கம்போங் புக்கிட் நாகா, பத்து 8, ஜாலான் புக்கிட் கெமுனிங், பண்டமாரன் மற்றும் அதன் சுற்றுப்புறங்களும் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Pengarang :