ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

தெங்கு சப்ரூல்  வங்கிக்கான அமைச்சரா?  மக்களுக்கு அமைச்சரா? டத்தோ ஸ்ரீ அன்வார் கேள்வி

ஈஜோக்.நவ.15- கோல சிலாங்கூரில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் தெங்கு டத்தோ ஸ்ரீ சப்ருல் , வங்கிகளுக்கான அமைச்சரா? அல்லது மக்களுக்கு அமைச்சரா என்று பலத்த கைத்தட்டலுக்கு கிடையே  டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியை நான் நாடாளுமன்றத்தில் தெங்கு சப்ருலிடம் நேருக்கு நேரே கேட்டுள்ளேன். ஏன் என்றால் அவர் நிதி அமைச்சர் என்ற முறையில் வங்கிகளின் முதலாளிகள் நலனை முன் வைத்து செயல் பட்டார் என்பதால். அவர் மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாக விமர்சித்தார்.

நேற்று நம்பிக்கை கூட்டணியின் வேட்பாளர் டாக்டர் சூல்கிப்ளியின் வெற்றிக்காக ஈஜோக் வட்டாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சார கூட்டத்தில் டத்தோ ஸ்ரீ அன்வார் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் ஆயிரத்துக்கும் அதிகமான கோலசிலாங்கூர் தொகுதி வாக்காளர்கள் கலந்து கொண்டனர். மலாய்க்காரர்கள், இந்தியர்கள், சீனர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

நான் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் ஓராண்டுக்கு 8 முறை மட்டுமே சிறப்பு லாட்டரி சீட்டு நடத்த அனுமதி கொடுத்திருந்தேன். ஆனால் இன்று பாஸ் கட்சியும் ஆட்சியில் இருக்கிறது ஆனால் சூதாட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாண்டு 22 முறை சிறப்பு லாட்டரி சீட்டு நடத்த அனுமதி கொடுத்துள்ளனர்.

அன்று சூதுக்கு எதிராக குரல் எழுப்பிய பாஸ் கட்சி தற்போது சூதுக்கு துணை போகிறது.ஆட்சியில் இருக்கும் போது ஒரு கொள்கையும் ஆட்சியில் இல்லாமல் இருக்கும் போது ஒரு கொள்கை என்று பாஸ் இரட்டை வேடம் போடுகிறது.

அதே போல் தான் ஒன் எம்.டி.பி விவகாரத்திலும்., உலக நாடுகள் இவ்விவகாரத்தில்  மாபெரும்  விசாரணை நடத்தி நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொண்டன. ஆனால் ஒன் எம். டி.பியின் தலைமை அதிகாரி அருள் கந்த கொடுத்த விளக்கத்தில் திருப்தி என்று பூசி மொழுகியது பாஸ் கட்சி என்று மக்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தினார்.

தேர்தல் வேட்பாளர் நியமன தினத்திற்கு 2 நாட்களுக்கு முன்பு 2 பில்லியன் ரிங்கிட் குத்தகையை பொது வழியில் நடத்தாமல் அறைக்குள்ளே பேசி முடித்தனர். இதில் பிரதமர் சப்ரி இஸ்மாயில், நிதி அமைச்சர் தெங்கு சப்ருல், நீர் நிலவள அமைச்சர் துவான் இப்ராஹிம் மான் ஆகியோர் சம்மந்தப் பட்டுள்ளனர் என்று மீண்டும் நினைவுறுத்தினார்.

இதே போன்று தான் கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பு 10 கோடி ரிங்கிட் காணவில்லை என்று கைரி ஜமாலுதின் கூறினார் என்பதையும் அன்வார் மீண்டும் வாக்காளர்களுக்கு நினைவுபடுத்தினார்.

மக்கள் வரி பணம் எப்படி தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் சூறையாடப்படுகிறது என்பதை வாக்காளர்களுக்கு அம்பலப்படுத்தினார்.


Pengarang :