ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோம்பாக் தொகுதியில் அமிருடின் ஷாரி வெற்றி

ஷா ஆலம், நவ 20- கோம்பாக் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளரான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 12,729 வாக்குகள் பெரும்பான்மையில் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலியை தோற்கடித்தார்.

இத்தொகுதியில் அமிருடினுக்கு 72,267 வாக்குகள் கிடைத்த வேளையில் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் போட்டியிட்ட நடப்பு உறுப்பினரான அஸ்மின் அலி 59,538 வாக்குகளைப் பெற்றார். தேசிய முன்னணியைச் சேர்ந்த மெகாட் ஜூல்கர்னாய்ன் ஒமாருடினுக்கு 30,723 வாக்குகளும் பெஜூவாங் வேட்பாளர் அஜிஸ் ஜமாலுடினுக்க 2,223 வாக்குகளும் சுயேச்சை வேட்பாளரான ஜூல்கிப்ளி அகமதுவுக்கு 675 வாக்குகளும் கிடைத்தன.


Pengarang :