ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெள்ளம்- சிலாங்கூரிலுள்ள 15 துயர் துடைப்பு மையங்களில் 1,126 பேர் அடைக்கலம்

ஷா ஆலம், நவ 20– இன்று காலை 9.00 மணி நிலவரப்படி சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 15 வெள்ள துயர் துடைப்பு மையங்களில் 1,126 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 660 பெரியவர்கள், 54 மூத்த குடிமக்கள், 432 சிறார்கள், 6 மாற்றுத் திறனாளிகள் 34 குழந்தைகளும் அடங்குவர் என்று சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் அகப்பக்கம் கூறியது.

ஜெராம் தேசிய பள்ளியில் 100 பேரும் டேவான் ஸ்ரீ நக்கோடாவில் 20 பேரும் கம்போங் ஜோஹான் செத்தியாவில் 50 தாமான் கெமிலாங் சமூக மண்டபத்தில் 69 பேரும் டிங்கில் சமூக மண்டபத்தில் 63 பேரும் புக்கிட் செர்டாங் பாலாய் ராயவில் 23 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

இது தவிர, டிங்கில் தேசிய பள்ளி (328 பேர்), பண்டார் பாரு தேசிய பள்ளி (80 பேர்), சுங்கை பாஞ்சாங் டேவான் ஹாலா சாரா (13 பேர்), புளோக் ஏஜிஎச் சாவா செம்பாடான் (8 பேர்), லாபு லஞ்சோட் எம்பிகேகே மண்டபம் (40 பேர்) புக்கிட் சங்காங் (33 பேர்) ஆகியவை இதர துயர் துடைப்பு மையங்களாகும்.

சிலாங்கூர், மலாக்கா, ஜொகூர், கிளந்தான் மற்றும் பேராக் ஆகிய ஐந்து மாநிலங்களில் 719 குடும்பங்களைச் சேர்ந்த 2,655 பேர் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.


Pengarang :