ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை இல்லை

கோலாலம்பூர், நவ 20- நாட்டின் பதினைந்தாவது பொதுத் தேர்தல் முடிவுகள் மிகவும் சிக்கலான மற்றும் முடிவெடுக்க இயலாத சூழ்நிலைக்கு நாட்டை இட்டுச் சென்றுள்ளது.

ஆட்சியை அமைப்பதற்கு தேவையான அறுதிப் பெரும்பான்மையை எந்த கட்சியும் பெறாத நிலையில் தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் நிலை உண்டாகியுள்ளது.
இன்று விடியற்காலை 4.30 மணி நிலவரப்படி ஹராப்பான் கூட்டணிக்கு 82 இடங்களும் பெரிக்கத்தான் நேஷனலுக்கு 73 இடங்களும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியது.

இந்த தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல் தனிப் பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. கிளந்தான் மாநிலத்தின் 14 நாடாளுமன்றத் தொகுதிகளையும் திரங்கானுவில் 8 நாடாளுமன்றத் தொகுதிகளையும் பாஸ் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அந்த கூட்டணி பெர்லிஸ் சட்டமன்றத்தின் 15 தொகுதிகளில் 14ஐ கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது.

புத்ரா ஜெயாவை மீண்டும் கைப்பற்றப்போவதாக சூளுரைத்துக் களம் இறங்கிய தேசிய முன்னணி நாட்டின் அரசியல் வரலாற்றில் முதன் முறையாக படுதோல்வி கண்டதோடு போட்டியிட்ட 178 தொகுதிகளில் முப்பதை மட்டுமே வென்றது.


Pengarang :