ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

பேராக்கில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு- சிலாங்கூரில் நிலைமை சீரடைகிறது

கோலாலம்பூர், நவ 20- பேராக் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சிலாங்கூரில் வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது.

மலாக்கா மற்றும் கிளந்தானில் வெள்ளம் காரணமாக துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கையில் மாற்றமில்லை.

பேராக் மாநிலத்தில் நேற்று 8.00 மணி நிலவரப்படி 249 குடும்பங்களைச் சேர்ந்த 874 பேர் துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்த வேளையில் இன்று காலை அந்த எண்ணிக்கை 263 குடும்பங்களை சேர்ந்த 920 பேராக அதிகரித்தது.

அவர்கள் அனைவரும் மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ள பத்து துயர் துடைப்பு  மையங்களில் தங்கியுள்ளனர்.

சிலாங்கூரில் இன்று காலை 8.00 மணி வரை துயர் துடைப்பு மையங்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை 233 குடும்பங்களைச் சேர்ந்த 886 பேராக உள்ளது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை 255 குடும்பங்களைச் சேர்ந்த 949 பேராக பதிவாகியிருந்தது.

சிப்பாங்கில் ஆறு, கோல சிலாங்கூர், கோல லங்காட், சபாக் பெர்ணம் ஆகிய மாவட்டங்களில் தலா மூன்று மற்றும் கிள்ளானில் ஒன்று என்ற எண்ணிக்கையை சிலாங்கூரில் மொத்தம் 15 துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.


Pengarang :