ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூரில் தேர்தல் சீராக நடைபெற்றது- விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பில் புகார் இல்லை- போலீஸ்

ஷா ஆலம், நவ 20- பதினைந்தாவது பொதுத் தேர்தலை முன்னிட்டு இம்மாதம் 5 ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது முதல் தேர்தல் தினமான நேற்று வரை தேர்தல் தொடர்பான 393 புகார்களை சிலாங்கூர் போலீசார் பெற்றுள்ளனர்.

இப்புகார்கள் தொடர்பில் 82 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளதோடு எழுவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது கூறினார்.

தேர்தல் பணியாளரின் திடீர் மரணம் தொடர்பான புகார் ஒன்றையும் தமது தரப்பு பெற்றுள்ளதாக அவர் சொன்னார். கிள்ளான், மெதடிஸ்ட் ஏசிஎஸ் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 45 வயது பணியாளர் திடீரென மரணமடைந்தார் என்றார் அவர்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக அந்த நபர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி பணிக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

பொதுவாக மாநிலம் முழுவதும் வாக்களிப்பு பணிகள் நேற்று சுமூகமான முறையில் நடைபெற்றன. சினமூட்டும் அல்லது உணர்ச்சிகரமான விவகாரங்கள் எதுவும் எழவில்லை என்றார் அவர்.


Pengarang :