ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

நான்கு மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிப்பு- நிவாரண மையங்களில் 1,251 பேர் தஞ்சம்

கோலாலம்பூர், நவ 22- வெள்ளம் காரணமாக நான்கு மாநிலங்களில் நேற்றிரவு 8.00 மணி வரை 1,251 பேர் துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பேராக் மாநிலத்திலுள்ள ஒன்பது துயர் துடைப்பு மையங்களில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 778 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ள வேளையில் கிரியான் மற்றும் பேராக் தெங்கா மாவட்டங்களில் உள்ள சில சாலைகளில் இலகு ரக வாகனங்கள் பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சிலாங்கூரில் நேற்று காலை 558 ஆக இருந்த வெள்ள அகதிகள் எண்ணிக்கை நேற்றிரவு  400 ஆக குறைந்ததாக மாநில வெள்ளப் பேரிடர் மேலாண்மை செயலகம் கூறியது.

அவர்கள் அனைவரும் கோல சிலாங்கூரில் உள்ள நான்கு துயர் துடைப்பு மையங்கள் மற்றும் கோல லங்காட்டில் உள்ள ஐந்து துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளதாக அது தெரிவித்தது.

ஜொகூர் மாநிலத்திலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் அங்கு தற்போது 62 பேர் மூன்று தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்


Pengarang :