MEDIA STATEMENTNATIONALPBT

பேராக் மாநிலத்தில் கூட்டு அரசாங்கம் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக சிவநேசன் உள்பட 10 பேர் பதவியேற்பு

கோல கங்சார், நவ 22- பேராக் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர்களாக ஜசெகவை சேர்ந்த ஏ.சிவநேசன் உள்பட பத்து பேர் இன்று பதவியேற்றனர். இங்குள்ள இஸ்தானா இஸ்கந்தாரியாவில் நடைபெற்ற நிகழ்வில் மேன்மை தங்கிய பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷா முன்னலையில் அவர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

அம்னோவின் சார்பில் மூவர் இந்த ஆட்சிக்குழுவில் இடம் பெற்றுள்ள வேளையில் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்த 4 ஜசெக உறுப்பினர்களும் இரு கெஅடிலான் உறுப்பினர்களும் ஒரு அமானா உறுப்பினரும் இடம் பெற்றுள்ளனர்.

கோத்தா தம்பான் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சாரானி முகமது மாநில மந்திரி பெசாராக மேன்மை தங்கிய பேராக் சுல்தான் முன்னலையில் நேற்று பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு 24 இடங்களும் தேசிய முன்னணிக்கு 9 இடங்களும் பெரிக்கத்தான் நேஷனலுக்கு 26 இடங்களும் கிடைத்தன.

பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பட்டியல் வருமாறு-

  1. டத்தோ முகமது ஜூல்கிப்ளி ஹருண் (தேமு-அம்னோ) லிந்தாங் தொகுதி
  2. டத்தோஸ்ரீ முகமது நிஸார் ஜமாலுடின் (ஹராப்பான்-அமானா) சுங்கை ராப்பாட் தொகுதி
  3. ஏ. சிவநேசன் (ஹராப்பான்-ஜசெக) சுங்கை தொகுதி

4- லோ ஸீ யீ (ஹராப்பான் ஜசெக) ஜாலோங் தொகுதி

  1. சபிலா முகமது (தேமு-அம்னோ) தெமெங்கோர் தொகுதி
  2. தே கோக் லிம் (ஹராப்பான்-ஜசெக) அவுலோங் தொகுதி
  3. சென்ட்ரியா இங் ஷை சிங் (ஹராப்பான்-  கெஅடிலான்) தெஜா தொகுதி
  4. கைருடின் அபு ஹனாப்பியா (தேமு-அம்னோ) பெலாஞ்சா தொகுதி)
  5. முகமது அஸ்லான் ஹெல்மி (ஹராப்பான்-கெஅடிலான்)  துவாலாங் செக்கா தொகுதி
  6. வூ கா லியோங் (ஹராப்பான்-ஜசெக) பாசீர் பெடாமார் தொகுதி

Pengarang :