ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

சிலாங்கூர் மாநில அரசின்  PKPS மூலம் ரவாங்கில்  மலிவு விற்பனை – மக்கள் அமோக வரவேற்பு

ரவாங், நவம்பர்.23- ரவாங் தாமான் காரிங்  உத்தாமாவில் இன்று மலிவு விற்பனை காலை 10 மணி தொடங்கி 1 மணி வரை நடைபெற்றது. ஆரம்பித்த சில நிமிடங்களில்  மக்களின் அமோக வரவேற்பை பெற்றது.
இதனிடையே மலிவு விற்பனை மூலம் பயனடைந்த சுகுமாரனிடம் கேட்டபோது இந்த காலக்கட்டத்தில் சாதாரமாக  மளிகை கடைகளில்  முட்டை வாங்கினால் ஒரு முட்டை 50 காசு சொல்கிறார்கள். சிலாங்கூர் மலிவு விற்பனை மூலம் 30 பி கிரேட் முட்டை 10 வெள்ளி கிடைப்பது எங்களை போல் ஏழ்மையான குடும்பங்களுக்கு வசதியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
எதிர்பார்த்ததை   விட மிகவும் மலிவான விலையில் செலவு பொருட்களை வழங்குவது ஆச்சரியமாக உள்ளது. இதனால் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் என்று அவர் தெரிவித்தார். இதுபோன்ற திட்டங்கள் இன்னும் நிறையப் பகுதிகளுக்கு சென்றடைய வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.
மேலும் இதன் மூலம் பயனடைந்த இன்னொரு நபர் நாகேஸிடம் கேட்டபோது இந்த விற்பனைத் திட்டத்தின் மூலம் கோழி, இறைச்சி, மீன், முட்டை அரசி, சமையல் எண்ணெய் போன்ற பொருள்களை குறைவான விலையில் வாங்க முடிகிறது என்று அவர் கூறினார்.
சந்தையை விட குறைவான விலையில்  பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த ஜெலாஜா ஏசான் ராக்யாட் திட்டத்திற்கு அவர் தம் நன்றியினை தெரிவித்து கொண்டார்.
ஆர்.பார்த்திபன்

Pengarang :