ECONOMYSELANGOR

இந்திய சமூகத் தலைவர்களுக்கான கொடுப்பனவு மாதத்திற்கு RM1,200 லிருந்து RM1,500 ஆக உயர்த்தப்பட்டது

ஷா ஆலம், நவ 25: பாரம்பரியக் கிராமத் தலைவர்கள், புதுக் கிராமங்கள் (பாகன்) மற்றும் இந்திய சமூகத் தலைவர்களுக்கான கொடுப்பனவு மாதத்திற்கு RM1,200 லிருந்து RM1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக இந்தப் பட்ஜெட்டில் மந்திரி புசார் அறிவித்தார்.

அவர்களின் பணி இப்பொழுது கடுமையானதாகவும் சிக்கலாகவும்  இருப்பதை கருத்தில் கொண்டு, சமீபத்திய  நோய் தொற்று காரணமாக நாட்டில் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு காலங்கள் மற்றும் மாநில மக்கள் வெள்ள இடர்ப்பாடுகளில் சிக்கிய நேரங்களில் அவர்களின் பணி மற்றும் அர்ப்பணிப்புகளைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு படி புதுக் கிராமத் தலைவர்களுக்கு ஈடாக உயர்த்தப் படுவதாகவும் கூறினார்.

அதே வேளையில் அவர்களின் சேவைகளில் மேம்பாடுகளையும் வளர்ந்து வரும் சவால்களை எதிர் கொள்வதற்கு ஏற்ப அவர்களின் ஆற்றலை வளர்த்துக் கொள்ளவும் மக்களுக்கு அவர்களின் சேவை தரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

புதிய கொடுப்பனவு விகிதம் ஜனவரி 2023 முதல் அவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.


Pengarang :