ALAM SEKITAR & CUACAECONOMY

வானிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர் அபாயத்தை சமாளிக்க சிலாங்கூர் மேம்பாட்டு கொள்கை மற்றும் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது

ஷா ஆலம், நவ. 29: சிலாங்கூர் மாநில அரசு பருவநிலை மாற்றத்திற்கு  ஏற்ப மாநில வளர்ச்சி திட்டங்களை மாற்றியமைப்பதில்  நிறுவனங்களின்  பங்களிப்பதை  உறுதிப்படுத்த அதற்கான வழி காட்டிகள் வழங்கியது

அக்டோபர் 19 அன்று மாநில அரசாங்க ஆட்சிக் குழு  கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு  ஏற்றுக்கொள்ளப் பட்ட பின்னர் அத்திட்டத்தை மாநில அரசின் கொள்கையாக  அமல்படுத்த அனைத்து தரப்புகளுக்கும் அனுப்பப்படும்  என   சுற்றுச்சூழல் எஸ்கோ (EXCO) தெரிவித்தார்.

“இந்தக் கொள்கையானது, மாநில அரசு, உள்ளூர் அதிகாரிகள், மாநில துறைகள் மற்றும் ஏஜென்சிகள், தொழில்துறை, உள்ளூர் சமூகங்கள் மற்றும் பிற பங்குதாரர்களை ஒருங்கிணைத்து பருவநிலை மேம்பாட்டிற்கான  வழிகாட்டியாக அமைய  உருவாக்கப் பட்டுள்ளது.

“மாநிலங்கள், நகரங்கள், மாவட்டங்கள் மற்றும் துணை மாவட்டங்களில் நிகழும் அனைத்து பேரிடர் சம்பவங்கள் பருவநிலை  தாக்கத்துடன் தொடர்புடையது என்பதால் பல்வேறு பேரிடர் தழுவல், தணிப்பு மற்றும் மேலாண்மை திட்டங்களை ஒருங்கிணைக்க ஒரு கட்ட அணுகுமுறை செயல்படுத்தப்படுகிறது” என்று ஹீ லாய் சியான் கூறினார்.

இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமர்வில் பருவநிலை மாற்ற பிரச்சனையைக் கையாள்வதற்கான தழுவல் மற்றும் தணிப்பு திட்டம் குறித்து பண்டார் உத்தாமா பிரதிநிதி ஜமாலியா ஜமாலுதீன் வாய்மொழி கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

இந்த கொள்கை சிலாங்கூர் மாநில  பருவநிலை மாற்ற நடவடிக்கை கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்க பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டதாக  சிலாங்கூர் வானிலை மாற்றத் திட்டத்தை மேற்கொள்ளவதற்கான ஒத்துழைப்பை மாநில அரசு எதிர்பார்க்கிறது,” என்று அவர் கூறினார்.


Pengarang :