ALAM SEKITAR & CUACA

இன்று பாசிர் மாஸில் வெள்ளம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

கோலாலம்பூர், டிச 3: கோலோக் ஆறு தொடர் மழையால் நிறைந்தால், கிளந்தனில் பாசிர் மாஸ் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகள் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்படும் என நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையால் (ஜேபிஎஸ்) எதிர்பார்க்கப்படுகிறது.

நள்ளிரவு மணி 12 முதல் கம்போங் குபாங் பாக் ஹிதம், கம்போங் டெர்சாங், கம்பங் தொக் டே  மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ஜெத்தி டானாவ் தொக் உபான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், காலை மணி 5 மற்றும் கம்போங் பெண்டாங் குச்சில், கம்போங் பெங்கலன் டெலோக், கம்பங் குவால் பரியோக் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை மணி 8 என வெள்ள அபாயம் உள்ளது.

கணிக்கப்பட்ட வெள்ளம் எதிர்பார்த்த நேரத்தை விட முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ நிகழலாம். அதனால் அனைத்து குடியிருப்பாளர்களும், குறிப்பாக வெள்ளம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், மற்றும் அதிகாரிகள் அல்லது வெள்ளப் பேரிடர் மேலாண்மை நிறுவனங்களின் அறிவுறுத்தல்களுக்கு கீழ்ப்படியவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு https://publicinfobanjir.water.gov.my, Facebook @PublicInfoBanjir மற்றும் Twitter @JPS_InfoBanjir என்ற இணையதளங்களைப் பொதுமக்கள் நாடலாம்.


Pengarang :