ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தற்காலிக தங்கும் மையத்தில் கோவிட்-19 நோய்த்தொற்று கண்டறியப் படவில்லை

கோலாலம்பூர், டிச 12.: நவம்பர் 19 முதல் தற்போது வரை தற்காலிக வெளியேற்ற மையத்தில் (பிபிஎஸ்) உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்  பட்டவர்களிடையே கோவிட் -19 சம்பவங்கள் எதுவும் கண்டறியப் படவில்லை என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நவம்பர் 11 முதல் 18 வரையிலான காலப்பகுதியில் 14 கோவிட் -19 சம்பவங்கள் கண்டறியப் பட்டதாகவும், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலை முடித்துவிட்டு அவரவர் வீடுகளுக்குத் திரும்பி விட்டதாகவும் அவர் கூறினார்.

“நவம்பர் 11 முதல் வெள்ளம் பல பகுதிகளில் ஏற்பட்டபோது தொற்று நோய் வழக்குகள் கண்காணிக்கப்படுகின்றன., பிபிஎஸ்ஸில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களிடையே கடுமையான இரைப்பை குடல் அழற்சி, கடுமையான சுவாசக்குழாய் நோய்த் தொற்று (ஏஆர்ஐ), வெண்படல அழற்சி மற்றும் தோல் நோய்த் தொற்றுகள் ஆகியவை கண்டறியப் பட்டன.

இன்று வரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டைபாய்டு, காலரா, லெப்டோஸ்பிரோசிஸ், கை, கால் மற்றும் வாய் நோய் (HFMD) மற்றும் டிங்கி போன்ற எதுவும் ஏற்படவில்லை என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்த ஆண்டு 49 வது தொற்றுநோயியல் வாரத்தில் (ME) கோவிட் -19யின் புதியச் சம்பவங்களின் எண்ணிக்கை 24.9 சதவீதம் குறைந்துள்ளது அதாவது 14,558 வழக்குகளில் இருந்து 10,937 வழக்குகளாக 4 முதல் 10 டிசம்பர் வரை குறைந்துள்ளது என்றார் டாக்டர் நூர் ஹிஷாம்.

– பெர்னாமா


Pengarang :