ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பத்தாங் காலியில் முகாமிடும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவீர்- அமைச்சர் உத்தரவு

ஷா ஆலம், டிச 16- இன்று காலை நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவத்தை தொடர்ந்து பத்தாங் காலி வட்டாரத்தில் முகாமிட்டு தங்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த அறிவிப்பு வரும் வரை அப்பகுதியில் முகாமிடும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் சுபியான் அப்துல்லாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் இஸ்மாயில் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்தவொரு முகாமிடும் நடவடிக்கையையும் ஏற்பாடு செய்யவோ அல்லது அத்தகைய நடவடிக்கைளை மேற்கொள்ள விரும்புவோருக்கு அனுமதியளிக்கவோ வேண்டாம் என அம்மையங்களின் உரிமையாளர்களுக்கு உத்தரவிடும்படி மாவட்ட போலீஸ் தலைவரை தாங்கள் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீக்கப்பட்ட பிறகு இது போன்ற முகாமிடும் நடவடிக்கைகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருவது தற்காலிக கூடாரங்கள தொடர்புடைய பொருட்கள் விநியோகிக்கும் தரப்பினருடன் நடத்தப்பட்ட சந்திப்பில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய உபகரணங்களின் விற்பனை 40 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் செய்தியாளர்களைச் சநதித்த போது அவர் சொன்னார்.


Pengarang :