ALAM SEKITAR & CUACAECONOMY

எல்.பி.டி.2 நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை- மாற்று வழிகளைப் பயன்படுத்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்து

ஷா ஆலம், டிச 19- இன்று காலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக கிழக்கு கரை நெடுஞ்சாலை 2இன் (எல்.பி.டி.2) 393.4வது கிலோ மீட்டரில் புக்கிட் பீசி முதல் அஜில் வரையிலான பகுதியில் போக்குவரத்து  தடைப்பட்டுள்ளது.

கோலாலம்பூரிலிருந்து திரங்கானு நோக்கிச் செல்லும் வாகனமோட்டிகள் டுஙகுன் டோல் சாவடியில் வெளியேறும்படி  மலேசிய நெடுஞ்சாலை வாரியம் பேஸ்புக் பதிவில் கேட்டுக் கொண்டது.

டுங்குன் டோல் சாவடியில்  வெளியேறும் வாகனமோட்டிகள் ஜாலான் பந்தாய் சாலையைப் பயன்படுத்தி கோல திரங்கானு செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

எனினும், கோல திரங்கானுவில் இருந்து எல்.பி.டி2 நெடுஞ்சாலை வழியாக குவாந்தான்/கோலாலம்பூர் செல்லும் வாகனங்கள்  எந்த இடையூறும் இன்றி பயணத்தை மேற்கொள்ளலாம்.

இதனிடையே, பெந்தோங்- கோலாலம்பூர் பழைய சாலையின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதோடு ஆங்காங்கே மரங்களும் விழுந்துள்ளதால் அந்த சாலையை வாகனங்கள் பயன்படுத்த முடியாது என்று பொதுப்பணி இலாகா கூறியது.


Pengarang :