ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கிளந்தான் வெள்ளம்- 94 துணை மின் நிலையங்களை டி.என்.பி. மூடியது

கோத்தா பாரு, டிச 19- கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக கோத்தா பாரு, தானா மேரா, பாசீர் மாஸ், பாசீர் பூத்தே ஆகிய மாவட்டங்களில் உள்ள 94 துணை மின் நிலையங்களை தெனாகா நேஷனல் பெர்ஹாட் (டி,என்.பி.) நிறுவனம் தற்காலிகமாக மூடியது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் கட்டங் கட்டமாக வழக்க நிலைக்கு திரும்புவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.

தானா மேராவில் 8 நிலையங்களும் பாசீர் மாஸில் 59 நிலையங்களும் பாசீர் பூத்தேவில் 22 நிலையங்களும் மூடப்பட்டன என்று அது தெரிவித்தது.

கனமழை பெய்யும் சமயங்களில் மக்கள் விழிப்புடன் இருக்கும் அதே வேளையில் நீரில் மூழ்கியுள்ள மின் இணைப்புகளிலிருந்து விலகியிருக்கும்படியும் தெனாகா நேஷனல் கேட்டுக் கொண்டது.

வெள்ள நிலைமை மோசமாகி வரும் நிலையில் பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு  துணை மின் நிலையங்களை மூடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.


Pengarang :