ECONOMYMEDIA STATEMENT

அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் பிரத்தியேகச் சிறார்களுக்கான பாலர் பள்ளிகள்- மாநில அரசு திட்டம்

ஷா ஆலம், ஜன 12- பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று மாநிலத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்றப் பகுதிகளிலும் அனிஸ் எனப்படும் பிரத்தியேகச் சிறார்களுக்கான சிறப்பு பாலர் பள்ளிகளை அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

ஐந்து மற்றும் ஆறு வயதுடைய மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கான தினசரி பராமரிப்பு மையங்களை அமைப்பதன் மூலம் குறைந்த வருமானம் பெறும் பெற்றோரின் சுமையைக் குறைக்க முடியும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இங்குள்ள செக்சன் 7 இல் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது அனிஸ் பாலர் பள்ளியில் சேர இதுவரை 100 விண்ணப்பங்கள் கிடைத்துள்ள வேளையில் அவர்களில் 35 பேர் அங்கு பயின்று வருகின்றனர் என்று அவர் சொன்னார்.

மற்ற மாணவர்களையும் சேர்ப்பதற்கு ஏதுவாக மேலும் அதிகமான அனிஸ் பாலர் பள்ளிகளை அமைப்பதற்கான சாத்தியத்தை ஆராய்ந்து வருகிறோம். இதர பாலர் பள்ளிகளில் பிரத்தியேக மாணவர்களுக்கான கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளதால் இந்த திட்டத்தில் பெற்றோர்களுக்கு வாய்ப்பினை வழங்க நாங்கள் விரும்புகிறோம் என அவர் தெரிவித்தார்.

இன்று இங்கு அன்ஸ் பாலர் பள்ளியை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கற்றல் நடவடிக்கைகளில் சிரமத்தை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த அனிஸ் பாலர் பள்ளித் திட்டத்தை மாநில அரசு உருவாக்கியுள்ளது.


Pengarang :