ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

மக்காவ் மோசடி- பெண் பொறியிலாளர் 29 லட்சம் வெள்ளியைப் பறிகொடுத்தார்

புக்கிட் மெர்தாஜம், ஜன 20- தொழிற்சாலை ஒன்றில் பொறியியளாராக வேலை செய்து வரும் பெண்மணி ஒருவர் மாக்காவ் மோசடிக் கும்பலிடம் 29 லட்சம் வெள்ளியைப் பறிகொடுத்தார்.

கடந்த டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் இம்மாதம் 6ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் ஜோர்ஜ் டவுனைச் சேர்ந்த அந்த 45 வயது பெண்மணி மோசடிக் கும்பலிடம் அந்த பணத்தை பறிகொடுத்ததாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது சுஹைலி முகமது ஜைன் கூறினார்.

கடந்த டிசம்பர் 1ஆம் தேதி துரித பட்டுவாடா நிறுவனத்தின் பணியாளர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பை அந்த பெண்மணி பெற்றதாக அவர் சொன்னார்.

அந்த பெண்ணின் பெயரில் ஒரு பொட்டலம் வந்துள்ளதாகவும் அதில் பலரின் அடையாளக் கார்டுகள் மற்றும் ஏடிஎம் அட்டைகள் உள்ளதாகவும் குற்றச்செயல்களுக்காக அந்த ஆவணங்களைப்  அப்பெண் பயன்படுத்தியதாகவும் அந்த ஊழியர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பின்னர் பேராக் மாநில போலீஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி எனக் கூறிக் கொண்ட ஆடவருக்கு தொலைபேசி இணைப்பு மாற்றப்பட்டுள்ளது. இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டதன் பேரில் கைது செய்யப்படாமல் இருக்க வேண்டுமானால் தங்களின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்ற வேண்டும் என அந்த அதிகாரி கூறியுள்ளார்.

அந்த நபரின் உத்தரவுக்கு அடிபணிந்த அந்த பெண்மணி கடந்தாண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் இம்மாதம்  6ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 19 லட்சம் வெள்ளி சொந்தப் பணத்தையும் குடும்பத்தினரிடமிருந்து பெற்ற 7 லட்சம் வெள்ளியையும் வங்கியிலிருந்து கடனாகப் பெற்ற 329,000 வெள்ளியையும் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளார் என்றார் அவர்.

தாம் மோசடிக் கும்பலினால் ஏமாற்றப்பட்டதை சகாக்கள் மூலம் இம்மாதம் 6ஆம் தேதி அறிந்து கொண்ட அப்பெண் இதன் தொடர்பில் போலீசில் புகார் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :