ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சீனப் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட “Op Selamat 19“ இறுதி நாளில் 1,389 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன 

கோலாலம்பூர்,  ஜன 28: சீனப் புத்தாண்டை முன்னிட்டு “Op Selamat 19“ நடைமுறைப் படுத்தப்பட்ட கடைசி நாளான நேற்று நாடு முழுவதும் மொத்தம் 1,389 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன.

புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ மாட் காசிம் கரீம் கூறுகையில் மொத்த விபத்துகளின் எண்ணிக்கையில் கார்கள் சம்பந்தப்பட்ட விபத்துகளே அதிகம் என்றார்.

“இதைத் தொடர்ந்து லாரிகள் (86), வேன்கள் (15), பேருந்துகள் (7), டிராக்டர் மற்றும் சைக்கிள் தலா ஒரு சம்பவம் என விபத்துகள் ஏற்பட்டுள்ளன,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

Op Selamat 19 நாடு முழுவதும் ஜனவரி 18 முதல் 27 வரை 10 நாட்களுக்கு செயல்படுத்தப்பட்டது.

 

– பெர்னாமா


Pengarang :