இசையால் புக்கிட் ஜாலில் அரங்கை அதிரச் செய்த ஏ.ஆர். ரஹ்மான்- பிரதமர் தம்பதியர் உள்பட 60,000 பேர் பங்கேற்பு

கோலாலம்பூர், ஜன 29 – தமிழ்நாட்டின் பிரபல இசையமைப்பாளர், ஆஸ்கார் நாயகன்  இசைப் புயல்  ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி புக்கிட் ஜாலில் விளையாட்டரங்கில் நேற்றிரவு நடைபெற்றது.

தனது ஆர்ப்பாட்ட இசையால் அரங்கை அதிர வைத்தும் மெல்லிய இசையால் ரசிகர்களின் மனதை வருடியும் இவர் படைத்த இசை சாகசம் அரங்கில் கூடியிருந்த சுமார் 60,000 பேரையும் மூன்று மணி நேரம் இசையின் மாய வலையில் சிக்க வைத்தது.

இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளைக் கொண்ட ஏ.ஆர். ரஹ்மானின் இந்த “சீக்ரெட் ஆஃப் சக்சஸ்ஸ்ரீ லைஃன் இன் மலேசியா 2023“ எனும் இந்த நிகழ்வுக்கு  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரின் துணைவியார் டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில், தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாட்சில், மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி.என். ரெட்டி ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.

 

நேற்றிரவு  மணி 8.30 மணி முதல் இசைநிகழ்ச்சியைத் தொடக்கிய ஏ.ஆர். ரஹ்மான், சிவாஜி தி போஸ் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களையும் பாடி ரசிகர்களின் பலத்த கைதட்டலை பெற்றார்.  

மேலும் இந்த இசை நிகழ்ச்சியில்   பிரபல பின்னணி பாடகர்களான  ஹரிஹரன், சுவேதா மேனன் ஆகியோருடன் நாட்டின் பிரசித்தி பெற்ற பாடகியான டத்தோஸ்ரீ சித்தி நுர் ஹலிசா பங்கேற்று அன்போ வா எனும் தமிழ்ப் பாடலைப் பாடி ரசிகர்களின பெரும் கரகோஷத்தைப் பெற்றார். அதோடு டிரம் கலைஞர்  சிவமணியின் படைப்பும் ரசிகர்களை பெரிதும கவர்ந்தது.


Pengarang :