ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் அரசு நிலையிலான தைப்பூச விழா பத்து மலை உள்ளிட்ட மூன்று இடங்களில் நடைபெறும்

ஷா ஆலம், ஜன 29– இம்மாதம் 5ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் பத்து மலை, ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தேவஸ்தானம் உள்ளிட்ட மூன்று இடங்களில் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.

பத்து மலை தவிர்த்து கெர்லிங், அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் மற்றும் கோல சிலாங்கூர் 2வது மைல் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயம் ஆகிய இடங்களிலும் இந்த விழாவை சிறப்பான முறையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பத்து கேவ்ஸ், தொழில் பேட்டைப் பகுதியில் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை நடைபெறும் பிரதான நிகழ்வுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையேற்பார்.

கலாசார நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு அங்கங்களோடு நடைபெறும் இந்த விழாவில் சிறப்புரையாற்றும் மந்திரி புசார், சிறப்பு அங்கமாக ஆலய நிர்வாகத்தினருக்கு மாநில அரசின் மானியத் தொகைக்கான காசோலைகளை மந்திரி  புசார் ஒப்படைப்பார்.

இதனிடையே, மாநில அரசின் ஏற்பாட்டிலான தைப்பூச கொண்டாட்ட நிகழ்வு கெர்லிங், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி மாலை 6.00 மணி தொடங்கி இரவு 11.00 மணி வரை பல்வேறு நிகழ்வுகளுடன் நடத்தப்படவிருக்கிறது.

கோல சிலாங்கூர்  ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் தைப்பூச தினமான பிப்ரவரி 5ஆம் தேதி காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மாநில அரசின் தைப்பூச விழா நிகழ்வுகள் நடைபெறும்.  


Pengarang :