ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பிளாஸ்டிக் பைகளுக்கான கட்டணமாக .480,000 வெள்ளியை எம்.பி.ஏ.ஜே. வசூலித்தது

ஷா ஆலம், பிப் 1- பிளாஸ்டிக் பைகளுக்கு விதிக்கப்படும் கட்டணம் மூலம் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் கடந்தாண்டில் 477,868.32 வெள்ளியை வசூலித்துள்ளது.

பிளாஸ்டிக் பைகளுக்கு 20 காசு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தில் பதிவு செய்துள்ள 8,861 வர்த்தக ஸ்தாபனங்களில் 984 ஸ்தாபனங்கள் மூலம் இந்த கட்டணத் தொகை வசூலிக்கப்பட்டது நகராண்மைக் கழகத் தலைவர் முகமது பவுசி முகமது யாத்திம் கூறினார்.

வசூலிக்கப்பட்ட தொகையில் 60 விழுக்காடு அதாவது 286,720.99 வெள்ளி மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும். எஞ்சிய 40 விழுக்காடு அல்லது 191,147.33 வெள்ளி நகராண்மைக் கழகத்தின் அறங்காப்பு நிதியில் சேர்க்கப்படும் என்று அவர் சொன்னார்.

கடந்தாண்டு அக்டோபர் முதல் தேதி தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 11,397 வர்த்தக நிறுவனங்களிடமிருந்து 60 லட்சத்து 27 ஆயிரம் வெள்ளி லைசென்ஸ் புதுப்பிப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

இது தவிர, 3,059 அங்காடி வியாபாரிகளிடம் இருந்து லைசென்ஸ் புதுப்பிப்பதற்கான கட்டணமாக 503,145.64 வெள்ளி வசூலிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு ஜனவரி 26 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தாமதமாக லைசென்ஸ் புதுப்பிக்க  558 நிறுவனங்களிடமிருந்து 520,779 வெள்ளி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.

தற்காலிக வியாபார லைசென்ஸ் கட்டணமாக 19,982 வெள்ளியும் அண்மையில் நடைபெற்ற சீனப் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட வாண வெடி நிகழ்ச்சிகளுக்கான கட்டணமாக 5,840 வெள்ளியும் பெறப்பட்டன என்றார் அவர்.


Pengarang :