ECONOMYMEDIA STATEMENT

சிறு, நடுத்தர தொழில் முனைவோரின் பொருட்களை சந்தைப்படுத்த மாநில அரசு உதவி

ஷா ஆலம், பிப் 4- சிலாங்கூர் மாநில அரசு #produkkampung4u எனும் “கிராமம் நோக்கி நாம்“ திட்டத்தின் கீழ் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் உற்பத்தி பொருட்களை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை வகுத்துள்ளது.

கொள்முதல் செய்யப்படும் அப்பொருள்கள் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பைச் சேர்ந்த உதவி தேவைப்படும் தரப்பினருக்கு வழங்கப்படும் என்று கிராம மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் போர்ஹான் அமான் ஷா கூறினார்.

சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு உதவும் அதேவேளையில் அவர்களின் உற்பத்தி பொருட்கள் பிரபலப்படுத்தும் நோக்கில் “கிராமம் நோக்கி நாம்“ எனும் இந்த திட்டத்தை தாங்கள் அறிமுகப் படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.

வாங்கப்படும் அந்த பொருட்கள்  தேவைப்படும் தரப்பினருக்கு குறிப்பாக சிலாங்கூரில் உள்ள பாரம்பரிய கிராமங்களை சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.

இந்த திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று முன்தினம் இங்குள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.


Pengarang :