சிட்னி, பிப் 26 - நேற்றிரவு 9.24 மணிக்கு பப்புவா நியூ கினியின் காண்ட்ரியனில் இருந்து வடகிழக்கே 29 கிமீ தொலைவில் 6.2 ரிக்டர் அளவில் எனப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 38.158 கிமீ ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், 6.111 டிகிரி தெற்கு அட்சரேகை மற்றும் 149.7927 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் ஏற்பட்டதாக ஷின்ஹூவா செய்தி நிறுவனம் கூறியது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. சனிக்கிழமையன்று 10.50 மணிக்கு கன்ட்ரியனின் கிழக்கு-வடகிழக்கே 37 கிமீ தொலைவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறியது.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/05/earthquake-monitoring-tool-vibration-measurement-is-shown-as-red-line-graph_68708-73-2-960x734.jpg)