ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெள்ளத்திற்கு பிந்தைய துப்புரவு பணிகளை மேற்கொள்ள  சிலாங்கூர் நிவாரணக் குழு ஜோகூர் பயணம்

ஷா ஆலம், மார்ச் 8- ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்திற்கு பிந்தைய துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்காக நிவாரணக் குழுவை சிலாங்கூர் அம்மாநிலத்திற்கு அனுப்பியுள்ளது.

பல்வேறு அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய அந்த கித்தா சிலாங்கூர் பென்யாயாங் உதவிக் குழு, தென் மாநிலத்தில் வெள்ளத்திற்கு பிந்தைய துப்புரவுப் பணிகளில் கவனம் செலுத்தும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நேற்று நான் அறிவித்ததைப் சிலாங்கூர் மாநில உதவிக் குழு இரண்டாம் கட்ட உதவிப் பணிகளை மேற்கொள்ள இன்று ஜோகூர் பயணமாகும் என அவர் தெரிவித்தார்.

அவர்களின் பணி செவ்வனே நடைபெற இறைவனை இறைஞ்சுகிறேன் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சிலாங்கூர் மாநில பேரிடர் மேலாண்மைப் பிரிவு, அனைத்து ஊராட்சி மன்றப் பிரதிநிதிகள்,  செர்வ் எனப்படும் சிலாங்கூர் தன்னார்வலர் குழு உறுப்பினர்கள், டீம் சிலாங்கூர் மற்றும் கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனப் பணியாளர்களை உள்ளடக்கிய அந்த உதவிக் குழு குப்பை அகற்றும் லாரி மற்றும் உபகரணங்களோடு அங்கு பயணமாகும் என அவர் சொன்னார்.

மாநில அரசின் முதல் கட்ட கித்தா சிலாங்கூர் பென்யாயாங் சிலாங்கூர் உதவிப் பயணம் இம்மாதம் 4ஆம் தேதி அம்மாநிலத்திற்கு மேற்கொள்ளப்பட்டது.

சிலாங்கூர் மாநில பேரிடர் மேலாண்மை பிரிவின் (சேவை மேலாண்மை) செயலாளர்  முகமது ஹனாபி அகமது தலைமையிலான அக்குழு பல்வேறு அடிப்படை பொருட்களை மாநிலத்திற்கு வழங்கினார்


Pengarang :