ECONOMYMEDIA STATEMENT

ஆர். எஸ்-1 இன் கீழ் திட்டம் சீராக இயங்குவதை உறுதி செய்ய துணைக்குழு அமைக்கப்படும்

ஷா ஆலம், மார்ச் 17: முதல் சிலாங்கூர் திட்டத்தில் (ஆர். எஸ்-1) சேர்க்கப்பட்டுள்ள மூன்று மெகா திட்டங்கள் சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக அனைத்து ஏஜென்சி களையும் உள்ளடக்கிய துணைக் குழு அமைக்கப் படும்.

இந்தத் திட்டம் தெற்கு சிலாங்கூர் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பகுதி (IDRISS), சபாக் பெர்ணம் பகுதி மேம்பாடு (SABDA) மற்றும் சிலாங்கூர் கடல்சார் நுழைவாயில் (SMG) ஆகியவற்றை உள்ளடக்கியது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் கூற்றுப்படி, இந்தக் குழுவானது மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், மாநில சட்டமன்ற உறுப்பினர் அல்லது அதில் ஈடுபட்டுள்ள ஒரு பிரத்தியோக  அதிகாரியின் தலைமையில் செயல்படும்.

“நாங்கள் அனைத்து நிறுவனங்களையும் ஈடுபடுத்துகிறோம், இதனால் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் கவனித்துக் கொள்ள முடியும். சில விவகாரங்கள்,  மூன்று முதல் நான்கு நாட்கள் தேவைப்படும்  நிலை உள்ளது.. இதனால் திட்டங்கள் சிறிது  தாமதமானாலும், எங்களுக்கு தெரியும்,” என்று அவர் இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமர்வில் கூறினார்.

சிஜாங்காங் பிரதிநிதி டத்தோ டாக்டர் அஹ்மாட் யூனுஸ் ஹைரியின் கேள்விக்கு பதிலளித்த அவர், மாநிலத்தின் ஐந்தாண்டு வளர்ச்சிக் கட்டமைப்பிற்குள் 262 திட்டங்களில் 18 கடந்த மாதம் நிறைவடைந்துள்ளதாக கூறினார்.

அமிருடின் திட்டமிடலில் 64 திட்டங்களை சேர்த்தார், அதே நேரத்தில் பொருளாதார வலுப்படுத்துதல், சமூக உள்ளடக்கம், நிலைத்தன்மை மற்றும் நல்லாட்சி ஆகியவற்றின் மையத்தை முடிக்க 180 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

2025 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீத பங்களிப்பை அளிக்கும் மாநிலத்தின் விருப்பத்தை அடைவதோடு, மக்களின் நல்வாழ்வுக்காக நிலையான மற்றும் பொருளாதார மேம்பாட்டை உருவாக்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆர். எஸ்-1 அறிவிக்கப்பட்டது.


Pengarang :