ALAM SEKITAR & CUACAPBT

தாமான் ஸ்ரீ மூடா, வெலன்சியா அடுக்குமாடி குடியிருப்புக்கு குப்பைத் தோம்புகள் விநியோகம்- கவுன்சிலர் ராமு தகவல்

ஷா ஆலம், மார்ச் 24- இங்குள்ள வெலன்சியா அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு தலா 660 லிட்டர் கொள்ளளவு கொண்ட 24 குப்பைத் தோம்புகள் வழங்கப்பட்டன. 

வெலன்சியா அடுக்குமாடி குடியிருப்பின் கூட்டு நிர்வாக மன்றத் தலைவர் விஜயக்குமார்  கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வீ.கணபதிராவ் வழங்கிய ஆலோசனையின் பேரில் இப்பணி மேற்கொள்ளப்பட்டதாக ஷா ஆலம் நகராண்மைக் கழக உறுப்பினர் ராமு நடராஜன் கூறினார்.

மொத்தம் 540 வீடுகளை உள்ளடக்கிய எட்டு புளோக்குகளிலும் உள்ள குப்பைத் தோம்புகள் பழுதடைந்த  நிலையில் இருப்பது குறித்து கூட்டு நிர்வாக மன்றத்திடமிருந்து புகார் கிடைத்ததைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநிலத்தில் குப்பைகளை அகற்றும் பணிக்கு பொறுப்பேற்றுள்ள கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட்  (கே.டி.இ.பி.டபள்யூ.எம்.) தரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி இந்த குப்பைத் தோம்புகளை  தாங்கள் பெற்றுத் தந்ததாக அவர் சொன்னார்.

ஒவ்வொரு புளோக்கிற்கும் தலா மூன்று குப்பைத் தோம்புகள் வீதம் மொத்தம் 24 தோம்புகள் வழங்கப்பட்டன. முறையான குப்பைத் தோம்புகள் இல்லாத காரணத்தால் அக்குடியிருப்பு பகுதியில் நிலவி வந்த தூய்மைக் கேட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புதிதாக வழங்கப்பட்ட இந்த குப்பைத்  தோம்புகளை இந்த குடியிருப்புவாசிகள் முறையாகப் பயன்படுத்திக் கொள்வர்கள் என நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம். குப்பைகளை நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் வீசுவதன் மூலம் துர்நாற்றப் பிரச்சனை மற்றும் நோய்ப் பரவல் போன்றவற்றை தடுக்க முடியும் என்றும் அவர் சொன்னார்.

 


Pengarang :