ECONOMYMEDIA STATEMENT

ரஹ்மா உணவுப் பொருள் கூடைத் திட்டத்தை மந்திரி புசார் தொடக்கி வைத்தார்- 11,000 குடும்பங்கள் பயன் பெற வாய்ப்பு

கோல சிலாங்கூர், மார்ச் 26- சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி “பாக்குல் ரஹ்மா“ எனப்படும் அத்தியாவசிய உணவுப் பொருள் கூடைத் திட்டத்தை நேற்று தொடக்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் வாயிலாக மாநிலத்திலுள்ள 22 நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 11,000 பேர் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்டமாக உலு லங்காட், கோல சிலாங்கூர் சபாக் பெர்ணம், கோம்பாக் ஆகிய நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளில் இந்த உதவித் திட்டம் அமல்படுத்தப்படுவதாக அமிருடின் ஷாரி கூறினார்.

பாயோங் ரஹ்மா திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் இந்த முன்னெடுப்பில் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் தலா 500 பேருக்கு உதவ தாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வசதி குறைந்தவர்கள் வாழ்க்கையில் குறிப்பாக ரமலான் மாதத்தில் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் இந்த உதவியைப் பெறும் தகுதி உள்ளவர்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடமிருக்கும் பட்டியலிலிருந்து தேர்தெடுக்கப்படுவர் என்று என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று இங்கு பாக்குல் ரஹ்மா திட்டத்தை தொடக்கி வைக்கும் நிகழ்வுக்குத் தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். 


Pengarang :