ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

பேராக்கில் வெள்ளம்- நான்கு நிவாரண மையங்களில் 179 பேர் அடைக்கலம்

ஈப்போ, மார்ச் 26- லாருட் மாத்தாங் மற்றும் செலாமா மாவட்டங்களில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து அவ்விரு மாவட்டங்களில் 47 குடும்பங்களைச் சேர்ந்த 179 பேர் நான்கு துயர் துடைப்பு மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சுங்கை ரெலோங் சமூக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த தைப்பிங், கம்போங் சுங்கை ரெலாங் மற்றும் கம்போங் பாரு பத்து 5 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 79 பேர் இடப்பற்றாக்குறை காரணமாக நேற்றிரவு  புக்கிட் ஜானா தேசிய பள்ளிக்கு மாற்றப்பட்டதாக பேராக் மாநில பேரிடர் மேலாண்மை செயல்குழுவின் பேச்சாளர் கூறினார்.

புக்கிட் கந்தாங், கம்போங் ஜெலாப்பாங் ஜெயா மற்றும் தாமான் மாவார் 2 ஆகிய குடியிருப்புகளைக் சேர்ந்த 42 பேர் சிம்பாங் தேசிய பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

புக்கிட் கந்தாங், சுங்கை பாரு சமூக மண்டபத்தில் திறக்கப்பட்டுள்ள துயர் துடைப்பு மையத்தில் கம்போங் சுங்கை நியோரைச் சேர்ந்த 12 பேர் தங்கியுள்ள நிலையில் மேலும் 46 பேர் கம்போங் சுங்கை ஹால்ட் சமூக மண்டபத்தில் அடைக்கலம் நாடியுள்ளனர் என்றார் அவர்.

வெள்ளம் காரணமாக இப்பகுதியில் சாலைகள் எதுவும் போக்குவரத்துக்கு மூடப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வானிலை தெளிவாகக் காணப்படுவதாகவும் அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.


Pengarang :