ECONOMYMEDIA STATEMENT

ஐடில்ஃபிட்ரி சிறப்பு உதவி 3.46 மில்லியன் பெறுநர்களுக்கு ஏப்ரல் 17 அன்று செலுத்தப்படும்

கோலாலம்பூர், ஏப்ரல் 6:  மொத்தம் 3.46 மில்லியன் மக்கள் ஐடில்ஃபிட்ரி சிறப்பு நிதிக் கொடுப்பனவுகள் ரி.ம 157,2  கோடி தொகையை பெறுவார்கள், இது ஏப்ரல் 17 அன்று விநியோகிக்கப்படும்.
துணை நிதி அமைச்சர்  டத்தோஸ்ரீ அஹமட் மஸ்லான் கூறுகையில், அரசு ஊழியர்கள், அரசு ஓய்வு பெற்றவர்கள், அரிசி விவசாயிகள், சிறு தோட்ட  ரப்பர் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் பெறுபவர்களில் அடங்குவர்.
“இதற்கிடையில், ஓய்வூதியம் பெறாத படை வீரர்கள் உட்பட ஒரு மில்லியன் அரசாங்க ஓய்வு பெற்றவர்களும்  ரி.ம 350 மில்லியனைப் பெறுவார்கள்,” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
அரிசி விவசாயிகள், சிறு ரப்பர் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் அடங்கிய 850,000 பயனாளிகள் தலா 200 ரிங்கிட் பெறுவர், ஆக மொத்த மதிப்பு  ரிம 170  மில்லியன் ஆகும்.
முன்னதாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்  கடந்த  பிப்ரவரி  24 ந் தேதி  அன்று 2023 பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஓய்வு பெற்றவர்களுக்கு பிகேகேஏ அறிவித்தார்.
மார்ச் 29  அன்று, நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வர், புதிய பட்ஜெட் 2023 இல், நெல் விவசாயிகள், சிறு ரப்பர் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நீட்டிக்கப்பட்ட ஐடில்பிட்ரி உதவியை உள்ளடக்கிய கூடுதல்  நிதிகளை  அறிவித்தார்.
– பெர்னாமா

Pengarang :