ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மனித வளத்துறை அமைச்சரின் அதிகாரிகளை கைது செய்தது எம்ஏசிசியின் சுயமுடிவே  – பிரதமர்

புக்கிட் மெர்தாஜாம், ஏப்ரல் 15 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) சமீபத்தில் மனித வள அமைச்சர் வி. சிவக்குமாரின் மூத்த அதிகாரிகள் சிலரைக் கைது செய்தது முழுக்க முழுக்க அதன் சொந்த முடிவு என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.

பிரதம மந்திரி என்ற முறையில்,  ஊழல் குற்றச்சாட்டு எழுந்தால்  எவரானாலும்  அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்ஏசிசியிடம் கேட்டுக் கொண்டதாக அன்வார் கூறினார்.

”என்னிடம் வேறு தகவல் எதையும் எதிர்பாக்காதீர்கள்”, ஏனென்றால் கைது செய்யப்பட்டார் கள்  என்பதை  தவிர வேறு எந்த தகவலும் என்னிடம் இல்லை,  அநேகமாக,  அவ் அமைச்சகத்தில் (மனித வளம்) மூன்று அதிகாரிகள்,” மீது எம்ஏசிசி நடவடிக்கை  எடுத்திருக்கலாம் என்று அவர் கூறினார்.

பினாங்கு பூமிபுத்ரா வளர்ச்சி கவுன்சில் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார் இவ்வாறு கூறினார்.

கடந்த இரண்டு நாட்களாக சிவகுமாரின் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  வெளிநாட்டு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தமை தொடர்பில் கைது செய்யப்  பட்டவர்கள் என நம்பப்படுகிறது.

– பெர்னாமா


Pengarang :