ECONOMYMEDIA STATEMENT

நோன்புப் பெருநாளை முன்னிட்டு மெகா மலிவு விற்பனை, இலவச பற்றுச் சீட்டு உள்ளிட்ட திட்டங்கள் அமல்

ஷா ஆலம், ஏப் 21– புனித ரமலான் மாதம் மற்றும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரச மெகா ஏசான் அய்டில்பித்ரி எனும் பெயரில் மாபெரும் மலிவு விற்பனையை மாநிலத்தின் 23 இடங்களில் நடத்தியது.

அனைத்து மக்களும் பயன் பெறுவதற்கு ஏதுவாக இந்த மலிவு விலை விற்பனைத் திட்டத்திற்கு சிறப்பு உதவித் தொகையை மாநில அரசு வழங்கியதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மக்கள் நலனில் மாநில அரசு கொண்டுள்ள பரிவை புலப்படுத்தும் விதமாக மாநிலத்திலுள் 83,000 பேருக்கு ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளும் வழங்கப்பட்டன என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

இது தவிர, மாநிலத்திலுள்ள அரசு ஊழியர்கள், சமூக முன்னெடுப்பாளர்கள், கிராம செயல்குழுவினர், பள்ளிவாசல் பொறுப்பாளர்கள், உள்ளிட்ட தரப்பினருக்கு நோன்புப் பெருநாள் சிறப்பு வெகுமதியும் வழங்கப்பட்டது என்றார் அவர்.

சிலாங்கூர் நாம் அனைவருக்குமானது. கித்தா சிலாங்கூர் மக்கள் நலன் காக்கும் பரிவுத் திட்டமாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

மாநில அரசினால் நியமிக்கப்பட்ட சமூகத் தலைவர்களுக்கு ஒரு மாத அலவன்ஸ் சிறப்புத் தொகையாக வழங்கப்பட்டதாகவும் அமிருடின் சொன்னார்.

 


Pengarang :