ECONOMYMEDIA STATEMENT

தாமான் டெம்பளர் தொகுதியில் 300 குடும்பங்களுக்கு நோன்புப் பொருள் உதவிப் பொருள் விநியோகம்

ஷா ஆலம், ஏப் 21- தாமான் டெம்பளர் தொகுதியைச் சேர்ந்த 300 குடும்பங்களுக்கு 100 வெள்ளி மதிப்புள்ள உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.

வசதி குறைந்த குடும்பங்கள் நோன்புப் பெருநாளுக்கு ஏற்பாட்டைச் செய்வதில் இந்த உதவிப் பொருட்கள் ஓரளவு துணை புரியும் எனத் தாம் நம்புவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது சானி ஹம்சான் கூறினார்.

கம்போங் செலாயாங் பெர்மாய் மற்றும் கம்போங் செலாயாங் இண்டாவில் நடைபெற்ற இரு நிகழ்வுகளில் இந்த உதவிப் பொருட்கள் அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

முன்னதாக கம்போங் மிலாயு பத்து 16, ரவாங் சமூக மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் செலாயாங் நாடாளுமன்றத் தொகுதியுடன் இணைந்து புயலால் பாதிக்கப்பட்ட 15 குடும்பங்களுக்கு ரொக்க உதவியை முகமது சானி வழங்கினார்.

செலாயாங் வட்டாரத்திலுள்ள வசதி குறைந்தவர்களின் வீடுகளுக்கு அவர்  நேரில் சென்று பெருநாள் ரொக்க அன்பளிப்பு களையும் உதவி பொருட்களையும் வழங்கினார்.


Pengarang :