ECONOMYMEDIA STATEMENT

கிளானா ஜெயா தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எம்.பி.ஐ. மற்றும் எம்.பி.பி.ஜே. உதவி

பெட்டாலிங் ஜெயா, மே 27-இங்குள்ள ஜாலான் எஸ் எஸ் 5ஏ/15, கிளானா ஜெயாவில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்கள் எம் பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மத்திரி பெசார்  கழகம் மற்றும் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்திடம் இருந்து (எம்.பி.பி.ஜே.) 6,000  வெள்ளியை ரொக்க நன்கொடையாகப் பெற்றன.

எம்.பி.ஐ. சார்பாக அதன் நிறுவன  சமூக கடப்பாட்டு பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனல் இந்த நிதியை பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைத்த வேளையில் எம்.பி.பி.ஜே. சார்பில் டத்தோ பண்டார் முகமது அஸான் முகமது அமீர் அதில் கலந்து கொண்டார்.

ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பாக்காரிடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து  சம்பந்தப்பட்ட நான்கு குடும்பங்களையும் தாங்கள் நேரில் சந்தித்ததோடு வீடுகளையும் ஆய்வு செய்ததாக அகமது அஸ்ரி கூறினார்.

 ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3,000  வெள்ளி உதவித் தொகையாக வழங்க வாக்குறுதி அளிக்கப் பட்டு முதல் கட்டமாக 300 வெள்ளி நேற்று வழங்கப்பட்டது. மீதமுள்ள 2,700 வெள்ளி ஆவணங்கள் தயாரான பின்னர் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், எம்.பி.பி.ஜே. சார்பில் சம்பந்தப்பட்ட நான்கு குடும்பங்களுக்கு அரிசி மற்றும் முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களும் 3,000 வெள்ளி ரொக்கமும் வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

 எம்.பி.பி.ஜே. பணியாளர்களான பாதிக்கப்பட்டவர்கள் மீது நாங்கள் காட்டும் அக்கறை யின் அடையாளம் இதுவாகும் என்று அவர் கூறினார்.

கடந்த மே 19 அன்று மதியம் 2.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. மேலும் இரண்டு வீடுகள் 30 சதவீதம் பாதிக்கப்பட்டன.


Pengarang :