ECONOMYMEDIA STATEMENT

2023 ஆண்டு தேசிய ஊடகவியலாளர் தினக் கொண்டாட்டம் இன்று தொடங்கியது

ஈப்போ, மே 27- மலேசியாவில் உள்ள ஊடகவியலாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் 2023 ஆம் ஆண்டு தேசிய ஊடகவியலாளர் தினம் (ஹவானா) இன்று ஈப்போ நகரில் தொடங்கியது.

சுதந்திர ஊடகம், ஜனநாயகத்தின் ண் எனும் கருப்பொருளில் இந்த நிகழ்வு இன்று தொடங்கி இம்மாதம் 29ஆம் தேதி வரை கொண்டாடப்படும். இந்த கொண்டாட்டத்தின் தொடக்க நிகழ்வு “ஹவானா ஹண்ட் மீடியா“ எனும் புதையல் தேடும் போட்டி விளங்குகிறது. கோலாலம்பூர் முதல் ஈப்போ வரையிலான இந்த புதையல்  தேடும் போட்டியில் 150 பேர் பங்கு கொண்டுள்ளனர்.

இந்த புதையல் தேடும் போட்டியில் பங்கேற்கும் 40 வாகனங்கள் இன்று காலை 8.00 மணியளவில் தலைநகரிலுள்ள பெர்னாமா தலைமையகத்திலிருந்து ஈப்போ நோக்கிப் புறப்பட்டது. இந்த வாகன அணியை தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை துணை அமைச்சர் தியோ நீ சிங்  வழியனுப்பி வைத்தார்.

இந்த வாகன அணி மாலை 3.00 மணியளவில் ஈப்போவிலுள்ள மேரு மைடின் மால் பேரங்காடியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு பல்வேறு நிகழ்வுகளுடன் கூடிய மினி ஹவானா கார்னிவல் விழா நடைபெறும்.

கடந்த 1939ஆம் ஆண்டு உத்துசான் மெலாயு பத்திரிகை தனது முதல் பதிப்பை வெளியிட்டதை நினைவு கூறும் வகையில் ஒவ்வோராண்டும் மே மாதம் 29ஆம் தேதி தேசிய ஊடகவியலாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது.


Pengarang :