ECONOMYMEDIA STATEMENT

இன்று மேலும் ஒன்பது இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

ஷா ஆலம், ஜூன் 4- சிலாங்கூர் மாநில அரசின் ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனை இன்று மேலும் ஒன்பது இடங்களில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் நடத்தப்படும் இந்த விற்பனை ஆசா ஜெயா ( பெர்மாத்தாங் தொகுதி), தொகுதி சேவை மையம் (கோல குபு பாரு தொகுதி), கம்போங்  இடாமான் அல்-ஃபாலா பள்ளிவாசல் வளாகம் (கோலக் கிள்ளான் தொகுதி), ஸ்ரீ அண்டாலாஸ் சமூக மண்டபம் (ஸ்ரீ செர்டாங் தொகுதி) ஆகிய இடங்களில் நடைபெறும்.

இது தவிர, கோத்தா டாமன்சாரா தொகுதியின் தாமான் சுபாங் பாரு, டேவான் புடிமான்,  பலாக்கோங் தொகுதியின் பண்டார் துன் ஹூசேன் ஓன், சுங்கை ராமால் தொகுதியின் செக்சன் 16, பண்டார் பாரு பாங்கி, குவாங் தொகுதியின் கம்போங் பாரு கூடைப்பந்து மைதானம், மோரிப் தொகுதியின் தாமான் ஹர்மோனி ஆகிய இடங்களிலும் இந்த மலிவு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00  வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.


Pengarang :