MEDIA STATEMENTPBT

டிங்கி ஒழிப்பு விழிப்புணர்வுத் தினத்திற்கு RM5,000 நிதி – எம்பிஐ

ஷா ஆலம், ஜூன் 15: டிங்கி ஒழிப்பு விழிப்புணர்வுத் தினத்திற்கு ஏற்பாடு செய்வதற்காகச் சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐ ஷா ஆலம் மருத்துவமனைக்கு RM5,000 நிதியை வழங்கியுள்ளது.

டிங்கி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவமனையின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு இந்த நன்கொடை அளிக்கப்பட்டது என்று எம்பிஐயின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புத் தலைவர் (CSR) அஹ்மத் அஸ்ரி ஜைனல் நோர் கூறினார்.

“எம்பிஐயில் உள்ள நாங்கள் மருத்துவமனையில் திட்டத்தை எளிதாக்க RM5,000 நன்கொடையாக வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

“டிங்கி காய்ச்சலைத் தவிர்ப்பதற்குப் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், சுற்றுப்புறத் தூய்மையை தீவிரமாகக் கவனித்துக் கொள்ளவும் தொடங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இன்று ஷா ஆலம் மருத்துவமனையின் டிங்கி ஒழிப்பு தின விழாவிற்குப் பின்னர் சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விழாவை ஷா ஆலம் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ருசிதா ஒத்மான் நடத்தினார்.” இதற்கு முன் நாங்கள் ஷா ஆலம் மருத்துவமனைக்குச் சுகாதார உபகரணங்களையும் நன்கொடையாக வழங்கியுள்ளோம்“, எனக் அஹ்மத் அஸ்ரி குறிப்பிட்டார்.


Pengarang :