ECONOMYMEDIA STATEMENT

சிலாங்கூரின் பொருளாதாரம் கடந்தாண்டு 11.9% ஆக உயர்வு- மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாநிலம் 25.5% பங்களிப்பு

ஷா ஆலம், ஜூன் 27- நாட்டின் மொத்த  உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூரின் பங்களிப்பு கடந்தாண்டு 25.5 விழுக்காடாக உயர்வு கண்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 24.8 விழுக்காடாக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளரச்சி 8.7 விழுக்காடாகப் பதிவான வேளையில் சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 11.9 விழுக்காட்டை எட்டியது.

கடந்த 2021ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 3.3 விழுக்காடாக இருந்த நிலையில் சிலாங்கூரின் வளர்ச்சி 5.3 விழுக்காடாக இருந்ததை மலேசிய புள்ளி விபரத்துறை வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.

சிலாங்கூர் தவிர்த்து இதர மூன்று மாநிலங்களும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் கூடுதல் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

பினாங்கு மாநிலம் கடந்தாண்டு மிக அதிகமாக அதாவது 13.1 விழுக்காட்டு பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. எனினும், நாட்டின் மொத்த உள்நாட்டு வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு 7.4 விழுக்காடாக மட்டுமே இருந்தது. 

அதே சமயம், பகாங் மற்றும் கோலாலம்பூர் ஆகியவை முறையே 10.8 விழுக்காடு மற்றும் 9.2 விழுக்காட்டு வளர்ச்சியை கடந்தாண்டுப் பதிவு செய்திருந்தன.


Pengarang :