ALAM SEKITAR & CUACAECONOMY

ரப்பர் சிறு தோட்டக்காரர்கள் உற்பத்தி ஊக்குவிப்புத் தொகையை இம்மாதம் பெறுவர்

கோலாலம்பூர் ஜூலை 2-  நாடு முழுவதும் உள்ள சிறு தோட்டக்காரர்கள் இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை. ரப்பர் உற்பத்தி ஊக்குவிப்பு தொகையை (ஐ.பி.ஜி.) பெறுவார்கள். ஜூன் மாத ரப்பர் உற்பத்தியின் அடிப்படையில் இந்த உதவி தொகை வழங்கப்படும்.

தீபகற்ப மலேசியாவில் ஜூன் மாதத்திற்கான லம்ப் ரப்பர் மற்றும் ஆக்டிவேட்டட் லேடெக்ஸிற்கு தீபகற்ப மலேசியாவில் ஜூன் மாதத்திற்கான உற்பத்தி ஊக்குவிப்பு நிதி 50 சதவீத உலர் ரப்பர் உள்ளடக்கத்திற்கு (டி.ஆர்.சி.) ஒரு கிலோவுக்கு 30 காசாகவும்  100 சதவீத உலர் ரப்பருக்கு ஒரு கிலோ 60 காசாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மலேசிய ரப்பர் வாரியம் கூறியது.

சபா  மாநிலத்தில்  50 சதவீத டி.ஆர்.சி. ரப்பருக்கு கிலோ 65 காசாகவும் 100 சதவீத டி.ஆர்.சி.க்கு கிலோ வெ.1.30 ஆகவும் உதவித் தொகை நிர்ணயிக்கப்பட்ட வேளையில் சரவாக்கில் 50 சதவீத டி.ஆர்.சி.க்கு கிலோ 60 காசாகவும் 100 சதவீதம் டி.ஆர்.சி.க்கு கிலோவுக்கு வெ.1.20ஆகவும்  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

இதற்கிடையில், ரப்பர் பாலுக்கான ஐ.பி.ஜி. விகிதம் 100 சதவீத டி.ஆர்.சி.க்கு ஒரு கிலோ  90 காசு என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.

இந்த புதிய ஆக்க விலை நிலை அதிகரிப்பு (பி.எச்.பி.) முன்னெடுப்பு இவ்வாண்டு தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.


Pengarang :