ECONOMYMEDIA STATEMENTSELANGOR

செலவுகளைக் குறைப்பதில் திருமணமாதோருக்கும் உதவும் மாநில அரசின் மலிவு விற்பனை

சுபாங் ஜெயா, ஜூலை 16- ஏசான் ரஹ்மா மலிவு விற்பனையின் வழி குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் மட்டுமின்றி திருமணமாகாதவர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் பயன் பெறுகின்றனர்.

சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற சுபாங் நாடாளுமன்றத் தொகுதி நிலையிலான மலிவு விற்பனையில் திருமணாகாத இளைஞர்களும் அதிகளவில் கலந்து கொண்டு சமையல் பொருள்களை குறைந்த விலையில் வாங்கினர்.

இந்த மலிவு விற்பனையைப் பயன்படுத்தி  அரிசி, முட்டைப் போன்ற பொருள்களை தாம் வாங்கியதாக கான்ஸ்டபிள் முகமது ஷியாபிக் (வயது 25) கூறினார்.

ஜோகூர் மாநிலத்தில் தற்போதுதான் பயிற்சியை முடித்துக் கொண்டு இங்கு பணியில் சேர்ந்துள்ளேன். இன்னும் திருமணம் ஆகாத போதிலும் பொருள் விலையேற்றம் என்னையும் பாதித்துள்ளது. எங்களைப் போன்றவர்களுக்கு இந்த விற்பனை பெரிதும் துணை புரிகிறது என்றார் அவர்.

இனிடையே, தங்கள் குடியிருப்புக்கு அருகே நடைபெற்ற பத்துக்கும் மேற்பட்ட மலிவு விற்பனைகளில் தாங்கள் இதுவரை பங்கேற்று பொருள்களை வாங்கியுள்ளதாக ஓய்வு பெற்ற போலீஸ்காரரான ஓஸ்மான் லாசிம் (வயது 70) மற்றும் அவரின் மனைவில் ஜைனாப் முகமது (வயது 67) தம்பதியர் கூறினர்.

எங்கள் பிள்ளைகளுக்கும் குடும்பப் பொறுப்பு உள்ளதால் அவர்களை சிரமப்படுத்தாமல்  எங்களுக்குத் தேவையான பொருள்களை இந்த மலிவு விற்பனைகளில் வாங்கிக் கொள்கிறோம். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட தடவை இந்த மலிவு விற்பனைகளில் பொருள்களை வாங்கியிருப்போம் என நினைக்கிறோம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இங்கு பொருள்களை வாங்குவதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்த முடிகிறது. வெளியில் இந்த விலையில் பொருள்களை வாங்க முடியாது என ஒஸ்மான் சொன்னார்.

 


Pengarang :