ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENT

குழந்தைகள் விளையாட்டு மைதானம் RM30,000 செலவில் மேம்பாடு –  பலகோங் தொகுதி

ஷா ஆலம், ஜூலை 18: சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் (PSP) கீழ் ஜூன் 13 ஆம் நாள் பெறப்பட்ட ஒதுக்கீட்டின் மூலம் தாமான் ஸ்ரீ செரஸில் உள்ள குழந்தைகள் விளையாட்டு மைதானம் RM30,000 செலவில் மேம்படுத்தப்படும்.

மே 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் கூடைப்பந்து மைதானம் மற்றும் ஓடுதளமும் கட்டப்பட்டதாகப் பலகோங் தொகுதி உறுப்பினர் கூறினார்.

“இந்த விளையாட்டு மைதானத்தை புனரமைக்க சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் ஒதுக்கீட்டை நாங்கள் சிறப்பாகப் பயன்படுத்துகிறோம். இதன் மூலம் உள்ளூர்வாசிகள் தங்கள் குடும்பத்தினருடன் ஓய்வு நேரத்தை நல்முறையில் செலவிட முடியும்,” என்று வோங் சியூ கி தெரிவித்தார்.

இந்த ஆண்டு பலகோங் தொகுதியில் உள்ள 10 பொது வசதிகள் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டதாகச் சியூ கி அறிவித்தார். 

காஜாங் நகராண்மை கழகம், உலு லங்காட் மாவட்டம் மற்றும் நில அலுவலகத்துடன் இணைந்து  RM100,000 ஒதுக்கீட்டில் உள்கட்டமைப்பு பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.


Pengarang :