Pasaraya Mydin meletakkan notis pemberitahuan di hadapan kaunter pembayaran kepada orang ramai boleh membuat pembayaran menggunakan aplikasi Bingkas ketika tinjauan Media Selangor di Mydin Mart, Selayang pada 15 Ogos 2022. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அத்தியாவசியப்  பொருள்களை வாங்குவதில் உதவ 30,000 சிலாங்கூர் வாசிகளுக்கு ஆண்டுக்கு வெ.3,600 நிதியுதவி

ஷா ஆலம், ஜூலை 19- அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதில் சிரமத்தை எதிர்நோக்கும் மாநிலத்தைச் சேர்ந்த 30,000 குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் பிங்காஸ் எனும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தின் கீழ் மாநில அரசு ஆண்டுக்கு 3,600 வெள்ளியை வழங்குகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் மூலம் செலங்கா செயலியில் உள்ள இ-வாலட், வேப்பேய் வாயிலாக சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த உதவித் தொகை மாதந்தோறும் வழங்கப்படுகிறது.

இ-வாலட்டில் மாதந்தோறும் சேர்க்கப்படும் 300 வெள்ளி உதவித் தொகையைக் கொண்டு இத்திட்ட பயனாளிகள் பதிவு பெற்ற பேரங்காடிகளில் 16 வகையான பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் கீழ் அவர்கள் அரிசி, மீ, மீகூன், பிஸ்கட், முட்டை, மாவு, சமையல் எண்ணெய், குளியல் பொருள்கள், சுத்தம் செய்யும் பொருள்கள் மற்றும் சிறார்கள் மற்றும் பெரியவர்களுக்கான நாப்கின்களை வாங்க முடியும். 

இந்த திட்டத்தில் பதிவு பெற்ற பேரங்காடிகளில் 99 ஸ்பீட்மார்ட் பல்பொருள் விற்பனைக் கடையே இத்திட்ட பயனாளிகளின் தேர்வுக்குரிய ,இடமாக விளங்க்கிறது.

இல்திஸாம் பென்யாயாங் முன்னெடுப்பில் இடம் பெற்றுள்ள இந்த பிங்காஸ் திட்டம் தொடர்பான விபரங்களை  amirudinshari.com எனும் அகப்பக்கம் வாயிலாக பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.


Pengarang :