EKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

பாயா ஜெராஸ் சட்டமன்ற தேர்தல் இயந்திரம் வாகனங்களுடன் வெள்ளோட்டம்.

செய்தி ;- சு. சுப்பையா
சுங்கை பூலோ. ஜூலை 19-  சிலாங்கூரில் உள்ள 56 சட்டமன்றங்களும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் உள்ள   பாயா ஜெராஸ் சட்ட மன்ற தொகுதியின் தேர்தல் இயந்திரம் அதிகாரப்பூர்வமாக பி.கே.ஆர் கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்லி மாலிக் தொடக்கி வைத்தார்.
இந்த கூட்டத்தில் தேர்தல் பிரச்சார உரை அனல் பறந்தது. தேசிய முன்னணியை சேர்ந்த அம்னோ மற்றும் ம.இ.கா. தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சுங்கை பூலோ தொகுதியின் அம்னோ தலைவரும் தேசிய முன்னணி தலைவருமான தான் ஸ்ரீ மெகாட் பிர்டாவுசும் கலந்துக் கொண்டு பிரச்சார உரை நிகழ்த்தினார். தேசிய முன்னணியின் தேர்தல் இயந்திரம்   பாயா ஜெராஸ்  மற்றும் கோத்தா டாமன்சாரா சட்ட மன்றங்களின் வெற்றியை உறுதி செய்யும் என்று கூறினார்.
சுங்கை பூலோ நாடாளு மன்ற முன்னாள் உறுப்பினரும் அதன் பி.கே.ஆர் கட்சித் தலைவருமான வழக்கறிஞர் சிவராசா தேர்தல் பிரச்சாரத்தை  தொடக்கி வைத்தார். மேலும் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணனும் கலந்து கொண்டு பிரச்சார உரையாற்றினார்.
இத்தொகுதியின் நடப்பு சட்டமன்ற உறுப்பினர் துவான் கைருடினும் அனல் பறக்கும் பிரச்சார உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கோத்தா டமன்சாரா சட்ட மன்ற உறுப்பினர் துவான் சத்திரியும் கலந்து கொண்டார்.
இந்த தேர்தல் இயந்திர தொடக்க நிகழ்ச்சியில் நம்பிக்கை கூட்டணி மற்றும் தேசிய முன்னணியை சேர்ந்த ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.
தொகுதி முழுவதும் 11 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த 11 தொகுதிகளிலும் பிரச்சாரம் தொடங்கி விட்டதற்கான அடையாளமாக 11 மோட்டார் சைக்கிள் வெள்ளோட்டம் விடப்பட்டது. இதே போல் கனரக வாகனங்களும் வெள்ளோட்டம் விடப்பட்டது.
பி.கே.ஆர் கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்லி மாலிக் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து உரையாற்றினார்.

Pengarang :