EKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

டத்தோ ஸ்ரீ அன்வார்-  சிலாங்கூர் மந்திரி புசார்  20 வேட்பாளர்களுடன் இரு   இந்தியர்களையும்  அறிவித்தார்.

செய்தி   ;- சு.சுப்பையா

 

ஷா ஆலம். ஜூலை.22- நாடு முழுவதும் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட கெ அடிலான் கட்சியின்  வேட்பாளர் பட்டியலை பிரதமரும் பி.கே.ஆர் கட்சியின் தேசியத் தலைவருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

இரவு 9.00 மணிக்கு தேர்தல் பரப்புரைகள்  ஆரம்பிக்க பட்டாலும் , 6 மாநில தேர்தல் வேட்பாளர்களின்  பட்டியலை  செவிமடுக்க  கட்சியின் தொண்டர்களும்  ஆதரவாளர்களும் மிக ஆர்வமாக ஷா  ஆலம் மைதானத்தில்   காத்திருந்தனர்.

இரவு 10.30 மணிக்கு அறிவிப்பு மேடைக்கு பிரதமர் வந்து சேர்ந்தார். அரை மணி நேரம் தேர்தல் பரப்புரை செய்தார். தேர்தல் பரப்புரைக்கு பின் சிலாங்கூர் மந்திரி புசாராக மீண்டும்  டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி  நிலைநிறுத்தப் படுவதாக  தொண்டர்களின்  உற்சாக வரவேற்பு  ஆர்பரிப்பு களுக்கிடையே அறிவித்தார்.

இதனை தொடர்ந்து பினாங்கு மாநில முதலமைச்சராக மீண்டும் நடப்பு முதல்வரான சாவ் குன் யாவ் நிலை நிறுத்தப்படுவதாக  அறிவிப்பு செய்த பிரதமர்,. இதே போல்  சிறந்த  சேவையை  வழங்கி வரும்   தற்போதைய  நெகிரி மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருனும்  மக்கள் எந்நேரத்திலும்  சந்திக்க  ஏற்றவர் என தனது சிபாரிசை  வழங்கினார்..

இதனை தொடர்ந்து சிலாங்கூர் மாநில பி.கே.ஆர். வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்.

சிலாங்கூர் வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு :-

N09 பெர்மாத்தாங்: முகமட். யாஹ்யா மட் ஷாரி
N10 புக்கிட் மெலாவத்தி: தீபன் சுப்ரமணியம்
N11 ஈஜோக்: ஹாமிடி அப்துல் மானன்
N14 ரவாங்: சுவா வெய் கியாட்

N16 சுங்கை துவா: டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
N18 உலு கிள்ளாங் ; ஜூவாரியா சூல்கிப்லி
N19 புக்கிட் அந்தாரபங்சா: முகமட் கம்ரி கமருடின்
N20 லெம்பா ஜெயா: சையட் அஹ்மட் சையட் அப்துல் ரஹ்மான் அல்ஹதாட் (அல்டிமெட்)
N25 காஜாங்: டேவிட் சியோங்
N32 ஸ்ரீ சித்தியா :  பாஹ்மி ஙா
N33 தாமன் மேடன்: அஹ்மாத் அகிர் பாவ்
N37 புக்கிட் லஞ்சாங் : புவா பெய் லீ
N38 பாயா  ஜெராஸ்: கைருடின் ஒத்மான்
N39  கோத்தா டாமன்சாரா : அமின் பின் யாசித்
N40 கோத்தா அங்கெரிக்: நஜ்வான் ஹலிமி
N43  செமந்தா : எர்னி அஃப்ரிஷா அஸிஸி
N46 போர்ட் கிள்ளான்: அஸ்மிசாம் ஜமான் ஹுரி
N48 செந்தோசா: குணராஜ் ஆர். ஜார்ஜ்
N49 சுங்கை காண்டீஸ்: ஜவாவி அஹ்மத் முக்னி
N54 தஞ்சோங் சிப்பாட்: போர்ஹான் அமன் ஷா

இரவு 11.30 மணியளவில் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு முடிவுற்றது. பி. என்  அம்னோ  தனது  பட்டியலை அறிவித்துள்ள  வேளையில்  , ஜ.செ.க வின் பட்டியல்  விரைவில்  அறிவிக்கப்பட உள்ளது . அதன் பின் சிலாங்கூர் வேட்பாளர்கள் முழு பட்டியல் கிடைக்கும்


Pengarang :