EKSKLUSIFMEDIA STATEMENT

செந்தோசா தொகுதியில் ஹராப்பான் வேட்பாளர் குணராஜ் தீவிரப் பிரசாரம்

கிள்ளான், ஜூலை 30- சிலாங்கூர் மாநிலத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்த் தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் செந்தோசா தொகுதியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு களம் இறங்கியுள்ள டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் காலை தொடங்கி இரவு வரை தொகுதியில் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு வாக்குகளைத் திரட்டி வருகிறார்.

இன்று காலை 7.00 மணிக்கு தாமான் செந்தோசா காளிகாம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற வழிபாட்டில் கலந்து கொண்ட அவர், பின்னர் கிளாங் ஜெயா சந்தைக்கு வருகை புரிந்து பொதுமக்களுட.ன அளவலாவினார். அதனைத் தொடர்ந்து தொகுதியிலுள்ள இரு தேவாலயங்களுக்கும் வருகை புரிந்து திருச்சபை வழிபாட்டில் கலந்து கொண்டவர்களைச் சந்தித்தார்.

புக்கிட் திங்கி சிவன் ஆலயத்தில் நடைபெற்ற பிரதோஷம் பூஜையிலும் குணராஜ் பங்கு கொண்டார். இன்று மாலை 4.00 மணிக்கு ருத்ரா தேவி சமாஜத்தில் நடைபெறவுள்ள ஆடி மாதம் நிகழ்வில் கலந்து கொள்ளும் அவர் இரவு 7.30 மணியளவில் ஷா ஆலம் தாமான் ஸ்ரீமூடாவில் நடைபெறவிருக்கும் கோத்தா கெமுனிங் தொகுதி ஹராப்பான் வேட்பாளர் எஸ். பிரகாஷின் முதன்மை தேர்தல் நடவடிக்கையை அறையின் திறப்பு விழா நிகழ்விலும் பங்கேற்கவுள்ளார்.

வரும் ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் செந்தோசா தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. ஹராப்பான் கூட்டணி சார்பில் குணராஜ் போட்டியிடும் வேளையில் பெரிக்கத்தான் நேஷனல் கட்சி சார்பில் ஜி. பரமேஸ்வரன், மூடா கட்சியின் சார்பில் ஆசிரியை தனுஷா, பார்ட்டி ராக்யாட் மலேசியா சார்பில் வ. ஜெயச்சந்திரன் ஆகியோர்  போட்டியிடுகின்றனர்.


Pengarang :