EKSKLUSIFMEDIA STATEMENT

முன்னாள் ஆட்சி குழு உறுப்பினர் வீ. கணபதிராவுக்கு  தங்கள் நன்றியை  தெரிவித்துக் கொண்டனர்

செய்தி.  மா. சிவகுமார்

கோலசிலாங்கூர்  ஆகஸ்ட் 15 ;  சிலாங்கூர் மாநிலத்தின்  இந்தியர் மேம்பாட்டுத்திட்டம்  (ஐ-சீட்  உதவி திட்டத்தின்)  வழி, தங்கள் வணிகத்திற்கான உதவி பொருட்களை   பெற்றுக் கொண்ட  கோலசிலாங்கூர்  மாவட்ட  சிறு வியாபாரிகள்.  முன்னாள் ஆட்சி குழு உறுப்பினர்  வீ. கணபதிராவுக்கு  தங்கள் நன்றியை  தெரிவித்துக் கொண்டனர்.

அண்மையில் கோலசிலாங்கூர் வட்டாரத்தை சேர்ந்த மூவருக்கு வணிக உபகரணங்கள்  உதவியாக  கிடைக்கப் பெற்றதாக கூறிய இருவர். அவர்களுக்கு துணி தைக்கும் இயந்திரமும், மற்றும் ஒருவர் கால்நடை பிராணிகள் வளர்ப்பவர்  புல் அரைக்கும்  இயந்திரம் ஒன்றை  உதவியாக பெற்றதாக கூறினார்,

தாமான் சிரம்பாயை சேர்ந்த செல்வராஜ் வீரன் என்பவருக்கு புல் அரைக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.  அது  தனது  கால்நடை பிராணிகளுக்கு உணவு தயாரிக்க  பெரும்  உதவியாக இருக்கும் என்றார்.  தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்வதுடன் , சிறு வருமானத்தில் குடும்பத்தை பராமரித்து கொண்டு தொழிலையும்  அபிவிருத்தி செய்ய வசதியற்ற நிலையில் வாழ்ந்து வந்த  அவர்களுக்கு இந்த உதவி , மாநில அரசின் பேருதவியாகும் , அதற்கு மாநில அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும்  கூறினார்  செல்வராஜ் வீரன்

இப்பொருட்கள் கிடைக்க உதவிய கிராமத்து தலைவர் திரு : கலைகுமார் ஆறுமுகம் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை இவ்வேளையில்  தெரிவித்துக் கொள்கிறோம் என்று அம்மூவரும் தெரிவித்தனர்.அதுமட்டும் இல்லாமல் Y.b. கணபதிராவ் அவர்களுக்கும் இவர்கள் தங்களின் நன்றியை தெரிவித்துக்  கொண்டனர்.


Pengarang :