ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஆற்றுத் தூய்மைக்கேடு கண்காணிப்பு நிலையங்கள் அடுத்தாண்டு ஜனவரியில் பூர்த்தியாகும்

ஷா ஆலம், ஆக19 – ஆறுகளில் மாசு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்த முன்னெச்சரிக்கைகளை வழங்குவதற்கு ஏதுவாக சிலாங்கூரில் தற்போது கூடுதல் இரண்டு  நதி கண்காணிப்பு  நிலையங்கள் (ஆர்.எம்.எஸ்.) கட்டப்பட்டு வருகின்றன.

சிலாங்கூர் நீர் மேலாண்மை ஆணையத்தின் (லுவாஸ்) ஒத்துழைப்புடன் பென்குருசன் ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் நிறுவனத்தால்  சுங்கை குன்தோங் மற்றும் கம்பிங் சுசுவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டம் 2024 ஆம் ஆண்டு ஜனவரியில்  பூர்த்தி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுமானப் பணிகள் முடிந்து  அந்த நிலையங்கள் முழு செயல்பாட்டைத் தொடங்குவதற்கு முன்பு அவை சோதனை மற்றும் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படும் என்று லுவாஸ் கூறியது.

முன்னதாக,  சுங்கை காரிங்  உட்பட மூன்று ஆறுகளில் மூன்று ஆர்.எம்.எஸ். திட்டங்களை உருவாக்குவது தொடர்பில் இரு தரப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தானது.

  நீரின் தரத்திற்கான தரவுப் பிடிப்பு உள்கட்டமைப்பு செயல்படக்கூடிய  இந்த நிலையங்கள் நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் மேல்நிலை நீர் சேகரிப்பு பகுதிகளில் நிலைநிறுத்தப்படும்  என்று லூவாஸ் நேற்று சிலாங்கூர்கினிக்கு அளித்த அறிக்கையில்  தெரிவித்தது .

தற்போது இத்தகைய ஒன்பது நீர் தர டெலிமெட்ரி நிலையங்கள்   செயல்பாட்டில் உள்ளன. மேலும் ஆறு  நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.


Pengarang :