EKSKLUSIF -MEDIA STATEMENT

ஊழியர்கள் சம்பளத்தை  வங்கிகள் மூலம் செலுத்த  முதலாளிகளுக்கு உத்தரவு!  அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

கோலாலம்பூர் ஆக 23- நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பளத்தை வழங்கும்படி அனைத்து முதலாளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் தெரிவித்தார்.

தொழிலாளர்களுக்கு சம்பளம்  வழங்கப்படவில்லை  அலலது சம்பளம் தாமதப்படுத்தப்படுகிறது  என்ற புகார்கள் இனியும் வராமல் தடுக்க கண்டிப்பாக முதலாளிகள் சம்பளத்தை  வங்கி மூலம் வேண்டும் என்று அவர் சொன்னார்.

தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் கிடைத்திருக்கிறது என்பதை இதன் மூலம் உறுதிபடுத்த முடியும். இதன் மூலம் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை மற்றும் கட்டாய தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்றார்.

தொழிலாளர்கள் சட்டம் 1995 பிரிவு 25 (ஏ) கீழ் முதலாளிகள் கண்டிப்பாக தங்கள் தொழிலாளர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பளத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

இதை மீறும் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுத்து 50,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம் என்று அவர் எச்சரித்தார்.

தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படாதது மற்றும் கட்டாய தொழிலாளர் விவகாரம் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது என்று அவர் சொன்னார்.

சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் சார்பில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாதது மற்றும் கட்டாய தொழிலாளர் விவகாரம் ஒரு குற்றமாக கருதப்படுகிறது.

இது நாட்டின் தோற்றத்தை பாதிக்கும் என்பதால் அனைத்து முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பளத்தை வழங்க வேண்டும் என்றார்.

நேற்று தலைநகரில் உள்ள தொழில் துறை நீதிமன்றத்திற்கு வருகை புரிந்த போது அங்கு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :